மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. கருணாஸ் சந்திப்பு இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது.

தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், எடப்பாடிக்கு அளித்து வந்த அதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதனால், எடப்பாடி அரசுக்கு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி அரசு உள்ளது.

எடப்பாடி அரசு பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மீண்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த எம்.எல்.ஏ. கருணாஸ் இன்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

அவர்களின் இந்த சந்திப்பு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நடைபெற்றது. சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.