பிக்பாஸ் நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும் தமிழ் கலாச்சாரத்திற்கு நல்லதல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டம் என்றும், அது தான்  தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்திற்கும் நல்லது என்றும்  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியி பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 45 நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமலஹாசன் இதனை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 3 கோடி பேருக்கு மேல் பார்வையாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடும் எதிர்ப்பும் உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் தேவையற்றது என பலர் கருதுவதாக தெரிவித்தார்.

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்ப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்திற்கும் நல்லது என்றும் பொன்னார் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலஹாசன் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.