சென்ற பாஜக ஆட்சியில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக பணியாற்றினார்.
ஆனால் இந்த தேர்தலில் தமிழகத்தில் மோடிக்கு எதிராக வீசிய அலையில் அதே தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், படுதோல்வி அடைந்தார். மத்தியில் பெரும்பான்னையுடன் பாஜக ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் பொன்.ராதாகிருஷ்ணனால் அமைச்சர் ஆக முடியவில்லை.

இந்நிலையில் திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது  தேர்தல் கமிஷன், தவறு செய்து தான், 37 இடங்களில், தி.மு.க., கூட்டணியை , தமிழகத்தில் வெற்றி பெற வைத்ததா? தேர்தல் முடிவை, ஒருவரின் தலையில் மட்டும் சுமத்துவது தவறு என தெரிவித்தார்..

அனாதை பிள்ளைக்கு, அப்பன் யார்' என, தேடும் வேலையை வைக்காமல், கூட்டணி தோல்விக்கான பொறுப்பை, அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில், எம்.பி.,யாகி உள்ள, 37 பேரும், ஆறு மாதத்தில், தங்கள் சொத்தை விற்றாவது, விவசாய மற்றும் கல்விக் கடன்களை அடைக்க வேண்டும். இல்லா விட்டால், அவர்கள், பொய் சொல்லி, வெற்றி பெற்றதாக அர்த்தம். தமிழக தண்ணீர் பிரச்னையில், 50 ஆண்டுகளாக, ஆட்சி செய்த , அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என தெரிவித்தார்..

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை, கர்நாடகா கொடுக்க வேண்டும். அங்கு, காங்கிரஸ்., கூட்டணி ஆட்சி நடப்பதால், தமிழகத்தில் இருந்து, வெற்றி பெற்ற, 37 எம்.பி.,க்கள், கர்நாடக அணையை திறந்து, தமிழகத்திற்கு, தண்ணீர் கொண்டு வந்தாக வேண்டும் என பொன்.ராதாகிருஷ்னர் தெரிவித்தார்.

பிரதமர், மோடி தலைமையிலான, மத்திய அரசு, தமிழகத்துக்கு, 5 லட்சம் கோ டி ரூபாய்க்கான திட்டங்களை கொடுத்துள்ளது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், மதவாத அரசியல் நடத்துகின்றனர். தமிழக மக்கள், இன்னும் எத்தனை காலத்துக்கு தான், ஏமாளிகளாக இருக்கப்போகின்றனரோ என்று பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.