கட்சியையும் சின்னத்தையும் மீட்பேன் என்று தீபா கூறியிருந்ததற்கு, அதிமுகவில் 4-வது அணியாக உள்ள தீபாவை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுக மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், அதன் இணைப்பு விரைவில் நடைபெறும் என்று அதிமுக அணியினர் பேசி வருகின்றனர்.

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. 

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த தமிழக தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்காத நிலையில், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பில், அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், எனது தலைமையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு கட்சியையும், சின்னத்தையும் காப்போம் என்று எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை தலைவர் தீபா நேற்று கூறியிருந்தார்.

தீபாவின் இந்த பேச்சு குறித்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுகவில் 4-வது அணியாக உள்ள தீபாவை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.