pon radaha krishsnan press meet kumbakonam
மக்கள் பிரச்சனைகள் குறித்து தமிழக அமைச்சர்கள் கவலைப்படுவதில்லை என்றும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முன் வரவேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக கும்பகோணம் அரசு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் எந்த அணிக்கு கிடைத்தாலும் யாருக்கும் உபேயாகம் இல்லை எனவும் தமிழக அமைச்சர்கள் தங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முன் வரவேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் நாள்தோறும் கொலை கொள்ளை நிகழ்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், இதற்கு ஊடகங்களே சாட்சி என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் சேது சமுத்திர திட்டம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் நீதிமன்ற உத்தரவுப்படி நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த பொன் ராதாகிருஷ்ணன் ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்காமல் நதிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லை என்றார்.
50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க.வை மக்கள் மிகவும் நம்பி ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.
