Asianet News TamilAsianet News Tamil

ஆளுங்கட்சியை சேர்ந்த இளம் திமுக பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா.. இதுதான் காரணமா?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 33ல் திமுகவும், அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பானமையான இடங்களில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து நகராட்சியை கைப்பற்றியது.

Pollachi dmk councilor sudden Resign
Author
First Published Dec 24, 2022, 12:17 PM IST

பொள்ளாச்சி நகராட்சியின் 7வது வார்டு திமுக கவுன்சிலர் நர்மதா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 33ல் திமுகவும், அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பானமையான இடங்களில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து நகராட்சியை கைப்பற்றியது. பொள்ளாச்சி திமுக நகர செயலாளர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- ரன்னிங்.. சேஸிங் மொத்தமும் வேஸ்டா.. ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை அசால்டாக தட்டித்தூக்கிய திமுக.!

Pollachi dmk councilor sudden Resign

இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் திமுக பிரமுகர் கண்ணுச்சாமி என்பவரது மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  அதில் அவர் சொந்த காரணங்களுக்காக என்னால் இப்பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், நான் வகிக்கும் நகரமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  உட்கட்சி பூசல் காரணமாகவே அவர் பதவியை ராஜினாமா செய்ததாக பரவலாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க;-  நானும் கிறிஸ்தவன் தான்..! இத சொன்னா அவங்களுக்கு நல்லா எரியும்- பாஜகவினரை வெறுப்பேற்றும் உதயநிதி

Follow Us:
Download App:
  • android
  • ios