தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேசமயம் இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் ரஜினி, கமலின் வருகையை பல்வேறு கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், வரும் தேர்தலில் ரஜினி,கமல் ஆகியோருக்கு விழுகிற அடியில் விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் ஏற்படக்கூடாது என பேசினார். மேலும்,  எம்ஜிஆர் குறித்து சில சர்ச்சை கருத்துக்களையும்  கூறியிருந்தார்.

இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விஜய் குறித்து பேசிய கருத்துக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘எங்கள் தளபதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கு’, ‘அரசியலில் செல்லாக்காசு சீமான்’, அரசியல் அறிவில்லாத சீமான் உள்ளிட்ட வசனங்கள் போட்டு போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.