பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ரிலீசாகி வெளியே வந்தால், தமிழகத்தில் மாற்று அரசியல் தாக்கம் இருக்கும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ரிலீசாகி வெளியே வந்தால், தமிழகத்தில் மாற்று அரசியல் தாக்கம் இருக்கும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவகாரத்திற்கே விடைகிடைக்காமல் தவித்து வருகிறது அதிமுக தலைமை. இதில் ஆரம்பத்தில் சசிகலா வந்தால் அதிமுக தலைமையேற்பது குறித்து யோசிப்போம் என தென்மாவட்ட அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். கால ஓட்டத்தில் இந்த விவகாரத்தில் அமைதியாகி விட்டனர். ஆனால் இப்போது சசிகலா ரிலீசாகும் தேதி கிட்டத்தட்ட வெளியாகி விட்டது. தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மீண்டும் சசிகலா பற்றி கருத்துக் கொறி பொறியை மூட்டி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜா. கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் செல்ல இருப்பதால், அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, ’’சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுப்பாரோ, அதை பொருத்துதான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்று அரசியல் தாக்கம் இருக்கும்’’என்று கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின்படி கர்நாடக சிறையில் இருந்து சசிகலா அடுத்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
