Asianet News TamilAsianet News Tamil

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ், வேன் மோதி உயிரிழப்பு... 15 லட்சம் அள்ளிக் கொடுத்த எடப்பாடியார்..!!

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இரும்பு தடுப்பு மீது மோதியதில், தடுப்பின் மறுபுறம் நின்றிருந்த காவலர் திரு. அய்யனமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்து

Police van involved in vehicle collision kills ... Edappadiyar who gave Rs 15 lakh .. !!
Author
Chennai, First Published Dec 7, 2020, 2:37 PM IST

பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சுமார் 15 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின் வருமாறு: 

இராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி காவல் நிலைய சரகம், பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை, அரப்பாக்கம் அருகே அமைக்கப் பட்டிருந்த காவல்சோதனைச் சாவடியில், ஆற்காடு நகர் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் 6.12.2020 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு வேன் இரும்பு தடுப்பு மீது மோதியதில், தடுப்பின் மறுபுறம் நின்றிருந்த காவலர் திரு. அய்யனமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்துமருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

Police van involved in vehicle collision kills ... Edappadiyar who gave Rs 15 lakh .. !!

பணியின் போது உயிரிழந்த காவலர் திரு. அய்யனமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தன் அவர்கள் காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைதெரிவித்துக் கொள்வதோடு, உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுளேன். 

Police van involved in vehicle collision kills ... Edappadiyar who gave Rs 15 lakh .. !!

பணியின் போது, உயிரிழந்த திரு. அய்யனமூர்த்தி அவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டு ள்ளேன். மேலும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios