சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி எம்.பி. வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வாபஸ் பெற்றப்பட்டதற்கான பின்னணி தகவலும் வெளியாகியுள்ளது.

சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. வீட்டிற்கு தினமும் ஒரு ஏட்டு தலைமையில் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று  கடுமையாக தாக்கி உயிரிழந்தனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினர். மேலும், சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவலர்கள் மீது சந்தேகம் இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியிருந்த அவரது சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டிற்கான காவலர்கள் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

ஆனால், காவல்துறை தரப்பில் கொரோனா தடுப்பு பணிக்கு காவலர்கள் தேவை உள்ளதாலும், கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக  விளக்கமளித்துள்ளனர்.