டெல்லியில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை அங்கிருந்த காவலர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்தப் பெண் தனக்கு பிறந்த  குழந்தைக்கு அந்த காவலரின் பெயரை சூட்டி நன்றி தெரிவித்துள்ளார்.  தனக்கு பிறந்தது  ஒரு பெண் குழந்தை என்றாலும் கூட ஆண் காவரின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டி உள்ளார் .இச்சம்பவம்  டெல்லி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில்  இந்த வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது .  இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன .  போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது .  இந்த வைரசால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வரும் அதே நேரத்தில் ஆங்காங்கே சில மனதை உருக்கும் மனிதநேய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன

அந்த வகையில் டெல்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது ,  டெல்லியில் ஒரு பெண் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த நிலையில் அவரது கணவர் போக்குவரத்து வசதி இல்லாமல் செய்வதியாது அங்கும் இங்கும் திண்டாடிக் கொண்டிருந்தார்,  இதைக்கண்ட  காவலர் ஒருவர் , உடனே அந்த பெண்ணை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார் .  சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது .  இந்நிலையில்  இக்கட்டான நிலையில் தங்களுக்கு உதவியாளர் காவலருக்கு  நன்றி கூறிய அத்தம்பதியர்  தங்களுக்கு பிறந்த அழகான பெண் குழந்தைக்கு " தயா வீர்சிங் "  என அந்த காவலில் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அந்த காவலர் ,  அந்தப் பெண்ணுக்கு உதவியதை நான் பெருமையாக கருதுகிறேன்,  என் பெயரை அவர்களின் குழந்தைக்கு வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .  என தெரிவித்துள்ளார். 

முன்னதாக இதே போல உத்தரபிரதேசத்தில் பிறந்த தனது குழந்தைக்கு, தான் பிரசவ வேதனையில் இருந்த போது  நொய்டாவில் இருந்து பரோலிக்கு வர உதவிய  போலீஸ் அதிகாரியின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டி ஒரு பெண் நன்றி உரித்தாக்கினார்.   அதன் பின்னர் சதீஷ்கரை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைக்கு கொரோனா மற்றும் கோவிட் என்று பெயர் சூட்டி இருந்தனர். போபாலை சேர்ந்த மற்றொரு தம்பதியினர் தங்களுக்கு  புதிதாக பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என பெயரிட்டனர்.  இந்நிலையில் தனக்கு உதவிய காவலரின் பெயரையே தன் குழந்தைகளுக்கு தம்பதியிர் சூட்டியிருப்பது  நாட்டு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது இதுவரை மொத்தம் 23 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அதில்  அதில் 723 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .