முதல்வர் ஜெயலிதா :
மறைந்த முதல்வர் ஜெயலிதா ஆட்சியில் போது, 1999 ஆம் ஆண்டு முதல் 2002 வரை. போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில்இருந்துள்ளார் போலிஸ் ஏட்டு வேல்முருகன்.
இவர் தற்போது தேனி அருகே உள்ள ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
வேல்குத்தி பிரார்த்தனை :
மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் உடல் நிலை பாதிகப்பட்ட போது, அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக , சென்னை வடபழனி கோவிலில் வேல்குத்தி பிரார்த்தனை செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலிஸ்ஏட்டுசபதம் :
இந்நிலையில், தற்போது தேனியில் பணியாற்றி வரும் ஏட்டு வேல்முருகன், நேற்று பணியில் இருக்கும் போதே, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் நிகழும் அசாதாரண அரசியல் சூழ்நிலை தன் மனத்தை மிகவும் பாதித்து உள்ளதாகவும், அதிமுக வை பொறுத்தவரையில், சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் :
ஒரு வேளை ஆளுனர், சசிகலாவை பதவி ஏற்க அழைத்தால், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என மனம் நெகிழ்ந்து, சபதம் எடுத்துள்ளார் ஏட்டு வேல்முருகன் .
