இந்த நிலையில், சென்னையில் நாளை கூட்டணி கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
T.Balamurukan
கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை 15-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் நாளை கூட்டணி கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்தலாம் என தேனாம்பேட்டை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் சென்னையில் வரும் 28ஆம் தேதி வரை கூட்டம் கூடுதல், ஆர்ப்பாட்டம், பேரணி, மனிதசங்கிலி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 14, 2020, 9:47 PM IST