Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம்... கூட்டம் கூட அதிரடியாக அனுமதி மறுத்தது போலீஸ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகிக்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகு, திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஏப்ரல் 15ம் தேதி  கூட்டப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  இந்தக் கூட்டம் தொடர்பாக திமுக சார்பில் காவல்துறைக்கு விளக்கம் அளித்திருந்தது. 

Police ban for dmk alla party meeting in chennai tomorrow
Author
Chennai, First Published Apr 14, 2020, 9:42 PM IST

  நாளை நடைபெறுவதாக இருக்கும் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

Police ban for dmk alla party meeting in chennai tomorrow
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 25 அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட தேவையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார்.

Police ban for dmk alla party meeting in chennai tomorrow
அதேவேளையிம் மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியது. இதில் திமுகவும் பங்கேற்றது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகிக்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகு, திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஏப்ரல் 15ம் தேதி  கூட்டப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  இந்தக் கூட்டம் தொடர்பாக திமுக சார்பில் காவல்துறைக்கு விளக்கம் அளித்திருந்தது. Police ban for dmk alla party meeting in chennai tomorrow
இந்நிலையில் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நேரடியாகக் கூட்டத்தைக் கூட்டாமல் காணொளிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 30 வரை கூட்டம் கூடுவதற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையைக் காரணம் காட்டியும் போலீஸ் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios