Asianet News TamilAsianet News Tamil

"தோழர் திருமாவுக்கு நடந்த அவமானம் இருக்கே..." மன்னிப்பு கேட்கும் கவிஞர் ஜெயபாலன்

கலந்துரையாடலில் இரு ஈழத் தமிழ் காடையர்கள், ஈழத்து சாதி வெறியர்கள், தோழர் திருமாவளவனை அவமானப்படுத்த முயன்றமை அதிர்ச்சி தருகிறது

Poet VIS Jayabalan said, COMRADE FORGIVE US - ELAM TAMILS
Author
Chennai, First Published Sep 4, 2019, 3:51 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, இந்தக் கூட்டம் துவங்கியபோது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கூட்ட அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டனர். இதற்குப் பிறகு அந்தக் கூட்டம் நடந்து முடிந்தது.  

இதுகுறித்து ஈழத்து கவிஞர் ஜெயபாலன் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில்; COMRADE FORGIVE US - ELAM TAMILS மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே - ஈழத் தமிழர் லண்டன் விம்பம் அமைப்பு 24 ஆகஸ்ட் 2019 அன்று ஈழத்தமிழரின் நீண்டகால நண்பரான தோழர் தொல்.திருமாவளவனுக்கு வரவேற்ப்பும், கலந்துறையாடலும் ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி கலந்துரையாடலில் இரு ஈழத் தமிழ் காடையர்கள், ஈழத்து சாதி வெறியர்கள், தோழர் திருமாவளவனை அவமானப்படுத்த முயன்றமை அதிர்ச்சி தருகிறது, என் போலவே பல ஈழ தமிழர்களும் லண்டன் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தோழர் பவுசரும் ஏனைய விம்பம் நிர்வாகத்தினரும் நிலமையை கட்டுப் படுத்தி அரசியல் காடையரை வெளியேற்றி நிகழ்ச்சியை சிறப்பான வகையில் நடத்தி முடித்துள்ளனர். அதிற்ச்சி அடைந்துள்ள சக ஈழத் தமிழ் கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று, அதன் அடிப்படையில் ஈழத் தமிழரின் முன்னணி ஆதரவுக்குரலான விடுதலைச் சிறுத்தை அமைப்பின் தலமை தோழர் திருமாவளவனிடமும் ரவிக்குமார் வன்னியரசு போன்ற அமைப்பு தோழர்களிடமும் லண்டன் சம்பவத்துக்காக ஈழத் தமிழர் சார்பாக மன்னிப்புக் கோருகிறேன். மன்னியுங்கள் மறந்து விடுங்கள் தோழர்களே எனக் கூறியுள்ளார் கவிஞர் ஜெயபாலன்.

Follow Us:
Download App:
  • android
  • ios