poes garden raid ... press meet by deepa
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தின் உண்மையான வாரிசு நான் இருக்கும்போது யாரைக் கேட்டு வருமான வரித்துறை அதிகாரி போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைந்தார்கள் என தீபா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
சென்னை போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து தகவல் அறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிகாலை 1 மணியளவில் போயஸ் கார்டன் வந்தார்.
தனது கார் டிரைவர் ராஜாவுடன் வந்த அவரை காவல் துறையினர் வேதா இல்லத்துக்குள் அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து அவர்களுடன் தீபா கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அதிகாரிகள் அவரை உள்ளே விடவில்லை
.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, இந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு சட்டப்படி வாரிசு நான், எனக்கு நோட்டீஸ் அனுப்பாமல் எப்படி வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். என்னிடமும் சொல்லவில்லை, என் சகோதரர் தீபக்கிடமும் சோதனை குறித்து அதிகாரிகள் எந்த விவரமும் சொல்லவில்லை என குற்றம்சாட்டினார்.
இந்த போயஸ் கார்டன் வீட்டின் மேல் நான் வழக்கு தொடர்நதுள்ளேன். இந்த சொத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என தெரிவித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த சோதனை நடக்கிறது. இதற்கு யார் காரணம் என தெரியவில்லை. இந்த சோதனையை எதிர்த்து வழக்கு தொடர்வேன். என்று ஆவேசமாக கூறினார்.
ஜெயலலிதாவுக்கு இந்த முறைகேடுகளில் தொடர்பு இருப்பதைப் போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கப் பார்க்கிறார்கள் என்றும், இதற்கு முழு காரணமும் சசிகலா குடும்பம்தான் என்றும் தீபா குற்றம்சாட்டினார்.
