ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக அறிவித்துள்ளது .  தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ,  அதில் ஒரு பகுதியாக  தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையிலும், எளிதாக பொதுத் தேர்வுகளை சந்திக்கும் வகையிலும்,   அவர்களை ஆயத்தப்படுத்தும் நோக்கில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது . 

ஆனால் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் பாமக இந்த தேர்வு முறையை கடுமையாக எதிர்துள்ளது.   இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,  5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது அரசு மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும்,    நீட் தேர்வை போன்று இந்த பொதுத்தேர்வும்  அர்த்தமற்றது என்று  ராமதாஸ்  விமர்சித்துள்ளார்.   இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி பாமக சார்பில் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார் . 

அதேபோன்று அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.   நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து எழுப்பிய சர்ச்சைக்கு பதில் கூறாமல் மௌனம் காத்து வந்த நிலையில்  செங்கல்பட்டில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு  கண்டம் தெரிவித்துள்ளதுடன் சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.