Asianet News TamilAsianet News Tamil

கமல் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் பா.ம.க. நிர்வாகி ராஜேஸ்வரி...

அ.தி.மு.க- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது அவமானம் என்று கூறி பாமகவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணையப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் அவர் சற்றுமுன்னர் கமலை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

pmk rajeswari joins hands with kamal
Author
Chennai, First Published Feb 25, 2019, 12:50 PM IST

அ.தி.மு.க- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது அவமானம் என்று கூறி பாமகவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணையப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் அவர் சற்றுமுன்னர் கமலை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.pmk rajeswari joins hands with kamal

திராவிட கட்சிகளை கடுமையக விமர்சித்து வந்த பாமக 2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டனி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒரு எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக அதிமுகவுடன் இணைந்தது கடும் கேலிக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதனால் அக்கட்சியில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள பலரிடையே பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. pmk rajeswari joins hands with kamal

இந்நிலையில், இந்த கூட்டணி உறுதியானதும் பாமக இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஷ்வரி, அதிமுக- பா.ஜ.கவுடனான கூட்டணி என்பது அவமானகரமானது என்று விமர்சித்து  பாமகவில் இருந்து விலகினார். அடுத்து   அவர் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன்னர் கமலை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

 இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ’’என்னுடைய இந்த தைரியமான முடிவை பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அண்ணன் சீமான் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தார். தினகரன் தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்தன. அதேபோல்தான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஹாசன் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதற்காகத்தான் அவரை சந்திக்க வந்தேன் ’’ என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios