வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ராமதாஸ் அபகரிக்கப் பார்ப்பதாக அபாண்டமான புளுகியிருந்தார். அதற்கு பதிலளித்த ராமதாஸ் அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இல்லாவிட்டால் ஸ்டாலின் விலகத் தயாரா? என்றும் வினவியிருந்தார். இன்று வரை அந்தக் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபிக்கவும் இல்லை; அரசியலில் இருந்து விலகவும் இல்லை. 

கொஞ்சமும் தகுதியில்லாமல் ராமதாஸுக்கு சவால் விடுக்கிறார். ஸ்டாலின் என்றாலே பொய் என்றுதான் பொருள் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கை:


முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1985-ம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார். 1960-களில் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால் அதற்கான மூலப் பத்திரத்தையும், பதிவு ஆவணங்களையும் தானே வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் எதிர்வினா எழுப்பியிருந்தார்.
அதன் பிறகும் மூல ஆவணங்களை வெளியிடவில்லை. மாறாக, அரசியலில் இருந்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ராமதாஸின் வினாக்களுக்கு விடையளிக்க அஞ்சி ஓடுவதிலிருந்தே அவரது நேர்மை வெளிப்படுகிறது.