Asianet News TamilAsianet News Tamil

பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு

 பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

PMK Founder Ramadoss is infected Corona virus
Author
First Published Jul 13, 2022, 7:23 PM IST

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

PMK Founder Ramadoss is infected Corona virus

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக  ட்வீட் செய்துள்ளார் ராமதாஸ்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..கைலாசா ஆண்டவர் மீண்டும் வருகிறார்.. நித்யானந்தா ரிட்டர்ன்ஸ்.! பக்தர்களே ரெடியா.!

Follow Us:
Download App:
  • android
  • ios