Asianet News TamilAsianet News Tamil

நகைக்கடன் என்று பொய் சொன்னவர்களுக்கு ஓட்டு போட்டுடீங்களே... டாக்டர் ராமதாஸூக்கு ஏக வருத்தம்!

இலவசத்துக்காக மக்கள் விலைமதிக்க முடியாத ஓட்டை தேர்தல் நேரத்தில் சரியாக பயன்படுத்தாமல் போய்விட்டார்கள். மக்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எங்களுக்கு அடுக்கு மொழியில் எல்லாம் பேசத் தெரியாது. நாங்கள் கோடம்பாக்கத்திலிருந்து வந்தவர்களும் அல்ல. 

PMK Founder Dr. Ramadoss upset with voting with dmk
Author
Ranipet, First Published Sep 29, 2019, 9:36 PM IST

பாமக மட்டுமே மக்களை பற்றி எப்போதும் கவலைப்படும். ஆனால். மக்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. நகைக்கடன், பயிர்க்கடன், கல்விக்கடன் என்று பல்வேறு பொய் சொன்னவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:

 PMK Founder Dr. Ramadoss upset with voting with dmk
தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டம் வேலூர். அதை மக்கள் நலனுக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். வேலூரை பிரிப்பதை அப்போதைய முதல்வர்கள் யாரும் செய்யவில்லை. இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை செய்திருக்கிறார். அதற்காக அவருக்கு பாமக சார்பில் பாராட்டை தெரிவிக்கிறோம். வேலூரில் விவசாயம்ப் பொய்த்துவிட்டது. பாலாறு வறண்டு விட்டது. ஆந்திரா தடுப்பணையைக் கட்டி நீரை தேக்கி கொண்டனர்.PMK Founder Dr. Ramadoss upset with voting with dmk
பாமக சார்பில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினோம். வேறு எந்தக் கட்சியுமே இதை செய்ததில்லை. பாமக மட்டுமே போராட்டங்களைச் செய்தது. மற்ற கட்சிகள் எல்லாம்  ஓட்டுக்கும் ஆட்சிக்கும் மட்டுமே கவலைப்படுவார்கள். பாமக மட்டுமே மக்களை பற்றி எப்போதும் கவலைப்படும். ஆனால். மக்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. நகைக்கடன், பயிர்க்கடன், கல்விக்கடன் என்று பல்வேறு பொய் சொன்னவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள்.  நமக்கு ஓட்டுப் போடவில்லை. பொய் சொல்பவர்களை மக்கள் ஏன் நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி என்று பாமக சார்பில் எத்தனை போராட்டங்கள் நடத்தியிருப்போம். மக்களின் நலனை பற்றி எப்போதும் கனவு காணும் எங்களுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை.PMK Founder Dr. Ramadoss upset with voting with dmk
இலவசத்துக்காக மக்கள் விலைமதிக்க முடியாத ஓட்டை தேர்தல் நேரத்தில் சரியாக பயன்படுத்தாமல் போய்விட்டார்கள். மக்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எங்களுக்கு அடுக்கு மொழியில் எல்லாம் பேசத் தெரியாது. நாங்கள் கோடம்பாக்கத்திலிருந்து வந்தவர்களும் அல்ல. எங்களுக்கு பொய்  எதுவும் பேசத் தெரியாது. இனியாவது, மக்கள் யோசித்து அவர்களின் விலை மதிக்க முடியாத வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios