Asianet News TamilAsianet News Tamil

தமிழக உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநரால் ஆபத்து... டாக்டர் ராமதாஸ் காட்டம்!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிமாநில துணைவேந்தரை நியமித்ததால் அண்ணா பல்கலைக்கழகம்  சீரழிவது போன்று சென்னை பல்கலை.யும் சீரழிந்து விடக்கூடாது! 

Pmk founder Dr.Ramadoss slam tamil nadu governor
Author
Chennai, First Published Mar 5, 2020, 10:32 PM IST

தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம்  ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.Pmk founder Dr.Ramadoss slam tamil nadu governor
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுனர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 Pmk founder Dr.Ramadoss slam tamil nadu governor
வெளிமாநில துணைவேந்தரை நியமித்ததால் அண்ணா பல்கலைக்கழகம்  சீரழிவது போன்று சென்னை பல்கலை.யும் சீரழிந்து விடக்கூடாது! தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம்  ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது. இந்த அணுகுமுறையை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும். தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios