வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமனறத்  தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தல் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை ஒரு மாதத்திற்கு முன்பே தங்கள் கூட்டணி கணக்குகளைத் தொடங்கிவிட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஒரு இடமும், கொ.ம.தே.கட்சிக்கு ஒரு இடமும் என தற்போது வரை முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தோழமைக் கட்சிகளான மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகள் எவை ? எவை ? என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமகவுக்கு  மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர். அரக்கோணம், தர்மபுரி , கடலூர், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வராத பட்சத்தில் மத்திய சென்னைக்குப் பதிலாக மயிலாடுதுறையும், திண்டுக்கல் தொகுதிக்குப் பதிலாக கள்ளக்குறிச்சி தொகுதியும் மாற்றித்தர அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.