Asianet News TamilAsianet News Tamil

”இது நியாயமா.? தமிழக அரசு இதை செய்து ஆகணும்”- தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை !

மழை காரணமாக மின் தேவை குறைந்து விட்ட நிலையில் அனல் மின் நிலைய உற்பத்தியையும் குறைத்து விட்ட மின்வாரியம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரக் கொள்முதலையும் குறைத்து விட்டது.

Pmk anbumani ramadoss tweet about tneb electricity issue
Author
Tamil Nadu, First Published May 17, 2022, 2:58 PM IST

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் நேற்று முன்நாள் 12 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதில் 5.22 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே மின்வாரியம் கொள்முதல் செய்திருக்கிறது. அதனால் கடந்த 15-ஆம் தேதி 6.77 கோடி யூனிட் மின்சாரம் யாருக்கும் பயன்படாமல் வீணாய் போயிருக்கிறது.

Pmk anbumani ramadoss tweet about tneb electricity issue

மழை காரணமாக மின் தேவை குறைந்து விட்ட நிலையில் அனல் மின் நிலைய உற்பத்தியையும் குறைத்து விட்ட மின்வாரியம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரக் கொள்முதலையும் குறைத்து விட்டது.  அதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி குறைக்க மறுக்கும் மின்சார வாரியம், காற்றாலை மின்சாரத்தின் அளவை மட்டும் விருப்பம் போலக் குறைப்பது எந்த வகையில் நியாயம் ? 

இந்தியாவின் பிற மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவும் சூழலில், அதிக அளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தால் அதை மின் சந்தையில் விற்பனை செய்ய முடியும். அதைக் கருத்தில் கொண்டு காற்றாலை மின்சாரத்தை வாரியம் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

இதையும் படிங்க : சீனர்களுக்கு 250 விசா வாங்கி கொடுத்த கார்த்தி சிதம்பரம்.! சிபிஐ ரெய்டு குறித்து வெளியான ‘பகீர்’ தகவல் !

Follow Us:
Download App:
  • android
  • ios