இந்திய மக்கள் தான் எனது குடும்பம், அவர்களுக்காக வாழ்வேன், வீழ்வேன் என உணர்ச்சி போங்க பிரதமர் மோடி பேசியுள்ளார். 

குமரியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசி பிரதமர் மோடி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு செய்த நற்பணிகள் என்றும் நினைவில் வைத்து போற்றக்கூடியவை. ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதேபோல் அந்திய விமானப்படை வீரர் அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

 

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு உள்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் கடந்த ஞாயிற்று கிழமை துவக்கி வைக்கப்பட்டது. முதல் தவணையில் ரூ.2000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 1 கோடியே 10 லட்சம் விவசாயிகளுக்கு நிதி செலுத்தப்பட்டது. பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை அதே மாதததில் செயல்படுத்தியதை யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றார். 

விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் கடனை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள். காங்கிரஸ் அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். குடும்ப அரசியல், சர்வாதிகாரம், கொள்கை முழக்கம், தடைகளை விரும்பவில்லை. துணிச்சல் மிக்க முடிவை எடுக்க 30 ஆண்டுக்கு பின் வலிமையான அரசை மக்கள் தேர்வு செய்துள்ளார்கள் என மோடி கூறினார்.