தன் தொகுதியான வாராணசி மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கலந்துரையாட இருக்கிறார்..இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்..

"கொரோனா தொற்று காலத்தில் வாராணசி மக்கள் சமூக அமைப்புகளுடன் இணைந்து முழு அர்ப்பணிப்புடன் உதவி தேவைப்படுவோருக்கு உதவியது மட்டுமில்லாமல் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். நாளை காலை 11 மணிக்கு எனது தொகுதியைச் சேர்ந்த இந்த மக்களுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்.
 கடந்த மாதம் வாராணசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார் மோடி. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் உள்ளாட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்."என்பது குறிப்பிடத்தக்கது.