டெல்லி எய்ம்ஸில் பிரதமர் மோடிக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவதோ கொரோனா தடுப்பூசியை போட்டார். இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட தடுப்பூசியை இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். செவிலியர்கள் கேரளாவைச் சேர்ந்த ரோசமா அனில் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா ஆகியோர் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்டனர். இந்திய நிறுவனமான பாரத் பயோடேக் ஐ.சி.எம்.ஆர். உடன் இணைந்து தயாரித்த கோவோக்சின் தடுப்பூசிக்கான முதல் டோஸ் பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று மேலும் கேட்டுக் கொண்டார். கொரோனா இல்லாத உலகை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி மகத்தானது என்று மோடி புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா கொரோனா தடுப்பூசி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.