Asianet News TamilAsianet News Tamil

பீதியூட்டும் கொரோனா... தற்காத்துக்கொள்வதுதான் ஒரே கடமை... மக்களுக்கு மோடி வலியுறுத்தல்!

“தீர்க்கமான மன உறுதியுடன் கொரோனாவை எதிர்க்க வேண்டும். முதலில் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். பிறகு அதைத் தடுக்க வேண்டும். இந்தியா மனோ தைரியத்துடன் கொரோனா வைரஸ்  தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் நம்மை நாமே தற்காத்துக்கொள்வதுதான் ஒரே கடமை."
 

PM Modi speech on corona virus
Author
Delhi, First Published Mar 19, 2020, 9:04 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்வதுதான் நமக்கான ஒரே கடமை என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.PM Modi speech on corona virus
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது மக்கள் ஊரங்கு முறையை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர் பல அறிவுரைகளையும் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். “தீர்க்கமான மன உறுதியுடன் கொரோனாவை எதிர்க்க வேண்டும். முதலில் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். பிறகு அதைத் தடுக்க வேண்டும். இந்தியா மனோ தைரியத்துடன் கொரோனா வைரஸ்  தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் நம்மை நாமே தற்காத்துக்கொள்வதுதான் ஒரே கடமை.

PM Modi speech on corona virus
65 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். வழக்கமான பரிசோதனையை தவிர வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாராத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.” என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios