திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கினார். துணிச்சலுக்கான, தைரியத்துக்கான பெயர்போனது திருப்பூர் மண், அர்ப்பணிப்பு நிறைந்த மக்கள் நிறைந்த மண். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோர் சார்ந்த பூமி இது என புகழாராம் சுட்டியுள்ளார். நமோ டீசர்ட், குல்லாய்கள் திருப்பூர் மண்ணில் இருந்து தான் உற்பத்தி ஆகின்றன.

மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் ராணுவத்தை நவீன மயமாக்கினோம். தமிழ்நாட்டில் ஒரு ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார். 

நமது ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை காங்கிரஸ் கொச்சைப்படுத்தியது. ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. வரும் தலை முறையினருக்காக சிறப்பான திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு கடைக்கோடியையும் சாலைகள் மூலம் இணைத்து வருகிறோம் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.