Asianet News TamilAsianet News Tamil

புதிய காஷ்மீர் பிறந்திருக்கிறது... . 370-ஐ நீக்கியது பற்றி பிரதமர் மோடி உரை!

இந்தப் பிரிவு தற்போது நீக்கப்பட்டுவிட்டதால் இனி ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் முன்னேற்றம் ஏற்படும். மக்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். காஷ்மீர், லடாக்கை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம். இதுவரை எந்தச் சட்டமும் காஷ்மீர் மக்களுக்கு பயன் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இயற்றும் எந்தச் சட்டமும் இப்பகுதி மக்களுக்கு பொருந்தவில்லை. 

PM Modi speak about kashmir 370 domlished
Author
Delhi, First Published Aug 9, 2019, 7:49 AM IST

காஷ்மீரில் படப்பிடிப்பு தளங்கள் தொடங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த 370-வது சிறப்பு சட்டப் பிரிவை நீக்கிய மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர், லடாக என காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு, எதிர்ப்பு காணப்பட்டுவரும் நிலையில், இந்த நடவடிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு உரையாற்றினார். அப்போது பேசியது:PM Modi speak about kashmir 370 domlished
இந்தியா ஒரே குடும்பமாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தச் சரித்திர முடிவை எடுத்திருக்கிறோம் இத்தனை ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் உள்ள சகோதர, சகோதரிகள் வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களுடைய முன்னேற்றத்துக்கு ருந்து வந்த தடை நீக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் தற்போது புதுயுகம் பிறந்து இருக்கிறது.  இதுவரை இருந்துவந்த 370-வது பிரிவினால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு வாழ்க்கையில் என்ன நன்மை கிடைத்தது? குடும்ப அரசியல், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை மட்டுமே அந்தச் சட்டப்பிரிவு கொடுத்தது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் ஓர் ஆயுதம் போல பயன்படுத்தப்பட்டு வந்தது. இதுவரை 42 ஆயிரம் அப்பாவி மக்கள் காஷ்மீரில் உயிரிழந்து உள்ளனர்.

PM Modi speak about kashmir 370 domlished
இந்தப் பிரிவு தற்போது நீக்கப்பட்டுவிட்டதால் இனி ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் முன்னேற்றம் ஏற்படும். மக்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். காஷ்மீர், லடாக்கை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம். இதுவரை எந்தச் சட்டமும் காஷ்மீர் மக்களுக்கு பயன் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இயற்றும் எந்தச் சட்டமும் இப்பகுதி மக்களுக்கு பொருந்தவில்லை. இது நாள் வரை 1.5 கோடி மக்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது 370 பிரிவு ரத்து செய்யப்பட்டு இருப்பதால், இனி ஜம்மு-காஷ்மீர், லடாக்  முன்னேற்றம் காணும். புதிய காஷ்மீர் பிறந்திருக்கிறது.

 PM Modi speak about kashmir 370 domlished
காஷ்மீரில் இனி ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், நீர்ப்பாசனத்துறை, மின்துறை, ஊழல் தடுப்புப்பிரிவு என அனைத்து பிரிவுகளும் உருவாக்கப்படும். நாடாளுமன்றம், சட்டப்பேரவை, பஞ்சாயத்து ஆகியவற்றில் மக்கள் பிரதிநிதி தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இப்பகுதியின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவார்கள். விரைவில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும்.PM Modi speak about kashmir 370 domlished
தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களை காஷ்மீரில் தயாரிக்கலாம். காஷ்மீரில் படப்பிடிப்பு தளங்கள் தொடங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios