Asianet News TamilAsianet News Tamil

டெல்லி செங்கோட்டையில் திருவள்ளுவர்... நீர் விழிப்புணர்வுக்காக திருக்குறளை பயன்படுத்திய மோடி!

சுதந்திர தினம் கொண்டாடி வரும் நிலையில் சில மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப நாட்டு மக்கள் துணை நிற்கவேண்டும். 

PM Modi mention Thiukkural in flag hoisting function
Author
Delhi, First Published Aug 15, 2019, 8:59 AM IST

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவரின் ‘ நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.PM Modi mention Thiukkural in flag hoisting function
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா கோலகலமாகத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 6-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டு சுதந்திர தின உரையைத் தொடங்கினார்.

 PM Modi mention Thiukkural in flag hoisting function
 “புதிய அரசு பதவியேற்று 75 நாட்களுக்குள் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை நனவாக்கியுள்ளோம். சுதந்திர தினம் கொண்டாடி வரும் நிலையில் சில மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப நாட்டு மக்கள் துணை நிற்கவேண்டும். நீர் சேமிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. நீரின்று அமையாது உலகு என்பதை மக்கள் உணர வேண்டும். அதற்காக ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகத்தை அமைத்துள்ளோம்.” என்று பிரதமர் மோடி பேசினார்.

 PM Modi mention Thiukkural in flag hoisting function
டெல்லி செங்கோட்டையில் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசி திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios