சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். பின்னர் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

அப்போது பேசிய அவர். நீங்கள் நல்ல பொறியாளர்களாக மட்டும் இல்லாமல் நல்ல குடிமகன்களாக இருக்க வேண்டும் வருங்கால கனவுகள் மாணவர்களின் கண்களில் தெரிகிறது மாணவர்கள் தங்களுக்கு கற்றுக்கொடுத்த பெற்றோர் ஆசிரியர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.  அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு நபர்களை சந்தித்தேன் அது பல்வேறு அனுபவர்களை கொடுத்தது என்றார். நாட்டிலையே தமிழ் மிகவும் பழமையான மொழி என்று புகழாரம் சூட்டினார். புதிய இந்தியா உருவாக்குவதே அனைவரின் நோக்கம் என்றும் அறிவியல் ஆராய்ச்சியில் இருப்பவர்கள் பலரும் ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களே என்றும் மோடி கூறினார். வாகனம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஸ்டாட் அப் தொழில்கள் அதிகரித்து வருகின்றன.இதுவரை 200 ஸ்டாட் அப் நிறுவனங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

ஓய்வு, உற்சாகம், உணவின்றி மாணவர்கள் புதிய கண்டிபிடிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ரோபோடிக் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐஐடி கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் முதல் 3 ஸ்டாட் அப் நாடுகளில் இந்தியா இடம்பெற்று உள்ளது.முயற்சி , அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன  மருத்துவத்திற்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேப்போல் தான் மனிதனின் வாழ்க்கையும் என்று நினைக்க வேண்டும் என்றார். வாழ்க்கை முறை நோய்கள் தான் எதிர்கால ஆரோக்கிய குறைப்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளன, தண்ணீரை சுத்திகரித்து மறுஉபயோகப்படுத்தும் முறையை கண்டறிவது அவசியம் என்றார், இந்தியர்களின் உழைப்பை கண்டு உலகமே வியக்கிறது என்ற பிரதமர் எந்த நாட்டிற்கு சென்றாலும் தாய் நாட்டை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.