பிரதமர் மோடி வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் குஜராத் மற்றும் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் தொடங்கி, அடுத்த மாதம் 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், நாளை மறுதினம் மாலை 4.45 மணிக்கு சென்னையை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு செல்கிறார். 

மேலும் செய்திகளுக்கு..திருவள்ளூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

பின்னர் கார் மூலம், நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.ஆளுநர் மாளிகையில் இரவில் தங்கும் பிரதமர், 29-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகம் சென்று அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பட்டமளிப்பு விழா முடிவடைந்தபிறகு, சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து மீண்டும் அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளார். 

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையான எஸ்பிஜி குழுவைச்சேர்ந்த 60 பேர் சென்னை வந்துள்ளனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக் கழகம், பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஐஎன்எஸ் அடையாறு ஆகிய இடங்களில் ஆய்வுசெய்தனர். சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..மக்களே உஷார்.! ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்.. ஆய்வில் வந்த அதிர்ச்சி முடிவுகள் !

மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திற்கு அனுமதி இன்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 29-ம் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 28, 29 ஆகிய தேதிகளில், சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கபட்டுள்ளது. மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !