பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கில்  அவரைப் பற்றி இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத தகவல்களுடன் ‘மன் பைரங்கி’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிவருகிறது. அவரின் பிறந்த தினமான நேற்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் பேஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

எந்த நாட்டு பிரதமருக்கும்  இல்லாத பெருமை நம்நாட்டு பிரதமர் மோடிக்கு உண்டு என்பதை யாரும் மறுத்து விடமுடியாது.  சிறுவயது முதலே அரசியில் பின் புலம் இல்லாத சாராண ஏழை குடும்பத்தில் பிறந்து. வறுமையின் காரணமாக  தேனீர் கடையில் பணியாற்றி, பின்னர் அரசியலில் சேர்ந்து , தன் கடின உழைப்பின் மூலமாக, படிப்படியாக உயர்ந்து மாநிலத்தின் முதலமைச்சர்,  நாட்டின் பிரதமர் என இவ்உயர் நிலைக்கு வந்தவர் மோடி. அவர்  இன்று பல இளைஞர்களுக்கு  ஊக்கமாகவும் முன் உதாரணமாகவும் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட தலைவர்களின் வரலாறு இத்தலைமுறையோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தபட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. 

அந்த வகையில். பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்கும் முயற்ச்சியில் கடந்த மக்களவை தேர்தல் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைச் விவரிக்கும்  'பி.எம் நரேந்திர மோடி' என்ற திரைப்படம் வெளியானது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் உருவான அத்திரைப்படத்தில் மோடியை பற்றிய தரவுகள்  முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக விமர்சனங்கள்

குவிந்தது. இந்நிலையில் தற்போது 'மன் பைரங்கி' என்ற பெயரில் நரேந்திர மோடியைப் பற்றிய மற்றொரு பையோபிக் திரைப் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துவருகிறார். இப்படத்திற்கு ’மன் பைரங்கி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  முன்னதாக பிரதமர் மோடியின் 69 வது பிறந்த நாளான நேற்று படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவிந்த தயாரிப்பாளர் சஞ்சய் பன்சாலி பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை கேள்விப்பட்டு பிரமித்துப்போனேன், அவரின் வாழ்க்கை பயணத்தில் ஏற்பட்ட திருப்பு முனைகள் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அதுவே அவரைப்பற்றிய திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. முழுக்க முழுக்க அவரின் வாழ்க்கையை தீர விசாரித்து இதுவரை யாரும் கேள்விப்படாத புதிய தகவல்களை திரட்டி படம் உருவாக்கப்பட்டுவருகிறது. நம் பெருமைக்குறிய பிரதமரைப்பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே விருப்பம் என அவர் கூறினார்.