இலங்கையில் நடந்த திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் போர்குற்றத்திற்காக விரைந்து இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிட்டானியா தமிழ்ச்சங்கம் இணைய வழி மாநாடு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்ப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு: 

சிறி லங்கா அரசாங்கத்தின் பலவீனத்தையும் அதன் கையாளாக தன்மையையும் சிறி லங்காவில் நிலவும் தற்போதைய நிலவரம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவற்றை மறைத்து சிறி லங்கா சர்வதேசத்துக்கு தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. சிறி லங்கா மீது நடவடிக்கை எடுக்கவும், சர்வதேசமும் தயக்கம் காட்டி வருவது  விசனத்துக்குரியது. அதேசமயம், சிறி லங்காவை நிர்பந்தித்து வழிக்குக் கொண்டுவரும் காத்திரமான பொறிமுறைகளை சர்வதேசம் கைவசம் வைத்திருந்தால் அவற்றை உபயோகிக்க ஏன் முன்வரவில்லை.பொருளாதார தடை என்பது மிகவும் காத்திரமான பொறிமுறைகளில் ஒன்றாகும். 

இங்கு தரப்பட்டுள்ள தரவுகள் யாவும் சிறி லங்கா மீது பொருளாதார தடை விதிப்பது நியாயமானதே என்பதை பறைசாற்றி நிற்கின்றன. தமிழர் சமுதாயம் மனித உரிமை ஆர்வலர்களும் சிறி லங்கா மீதான பொருளாதாரத் தடைக்கு ஆதரவு தேடி ஒன்று தொடரும் பட்சத்தில் பொருளாதார தடை நோக்கி சர்வதேச சமூகத்தை நகர்த்த முடியும். இன அழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தவும் தண்டனைகள் மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்து வரும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார தடை பெரிதும் வழிவகுக்கும். 

இந்த முக்கியமான காலகட்டத்தில் சர்வதேச சமூகம் தன் வசமுள்ள காத்திரமான பொறிமுறைகள் அனைத்தையும் குறிப்பாக, பொருளாதார தடையை சிறி லங்கா மீது   கொண்டுவர வேண்டும் என்பதை இந்த இணைய வழி மாநாடு முன் நிலைப்படுத்துகிறது. (19-12-2020)இல் நடைபெறவிருக்கும் இந்த இணையவழி மாநாட்டில் பங்கு கொள்ளும்படி அனைவரையும் அழைக்கின்றோம்.  பங்கு கொள்வதற்கான விவரங்கள் யாவும் கீழே  தரப்பட்டுள்ளன. 

➢ Zoom: https://us02web.zoom.us/j/8745256 3875?pwd=OXViNGtPZHp3NHFrcX FxWVF6ZEhRQT09
Passcode: 79299 
➢ Youtube: https://m.youtube.com/channel/UCrij fF827bKXoqiB54wrqpA
➢ Facebook: YouTube live stream link will be shared on @britishtamilsforum.