மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையில், இதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், எனவே கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது எனவும் தமிழக அரசு அறிவித்தது.

karunanidhi in marina க்கான பட முடிவு

இந்த வழக்கு நேற்று நடந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் மீணடும் விசாரணை தொடங்கியது. இரு தரப்பிலும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கடுமையான விவாதம் நடைபெற்றது.

இறுதியில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

m.k.stalin cry க்கான பட முடிவு

இந்த தீர்ப்பை கேட்டபோது கருணாநிதியின் உடல் அருகே அமர்ந்திருந்த அனைவரும் சோகத்திலும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் கதறி அழுதபோது துரைமுருகள், ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்டோர் கண்ணீருடன் அவரை சமாதானப்படுத்தினர்.