Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக வாயே திறக்கவில்லை... உண்மையை போட்டுடைத்த பியூஷ் கோயல்..!

நீட் தேர்வை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

piyus goyal press meet
Author
Tamil Nadu, First Published Apr 12, 2019, 5:34 PM IST

நீட் தேர்வை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது.  அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளனர். இரண்டு கட்சிகளும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விரும்பாத மாநிலங்களில் ரத்து செய்யப்படும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பாஜக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு தொடர்பாக எதுவும் குறிப்படவில்லை. piyus goyal press meet

இந்நிலையில் தமிழகப் பொறுப்பாரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் தமிழகம் இதுவரை கண்டிராத கூட்டணியை பா.ஜ.க அமைத்துள்ளது. பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைக்கு ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க கோதாவரி திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி நதி நீர் இணைப்புக்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றார். piyus goyal press meet

வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி மக்களை ஏமாற்றிவருகிறார். தி.மு.கவின் வேட்பாளர்கள் 2 ஜி மற்றும் தொலைத் தொடர்பு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று கூறினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டினோம். விமானத்தில் அறிவிப்பை, தமிழில் ஒளிபரப்பு செய்தோம். ரயில் டிக்கெட் பதிவை தமிழை கொண்டு வந்து தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறோம் என்றார். piyus goyal press meet

மேலும் அவர் பேசுகையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. எங்களுடைய கூட்டணி கட்சியான அதிமுகவை சமாதானம் செய்வோம். நீட் தேர்வு தேவையில்லை என்று அ.தி.மு.க கூறவில்லை. தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு செய்வார்’ என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios