தமிழகத்தில் செல்வாக்கு சரிந்து கிடக்கும் அதிமுகவை, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரசாந்த் கிஷோரை எடப்பாடியார்  சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையைக் கிளப்பியது. 

இந்த சந்திப்பில், தேர்தல் வியூகங்களை விட, கட்சியில் எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வியூகங்கள் பற்றியே அதிகம் ஆலோசித்திருக்கிறார். கட்சியில் தன்னை ஒற்றைத் தலைமையாக எடப்பாடி நிலை நிறுத்திக் கொண்டால்தான் அடுத்து வரும் தேர்தலை அதிமுக திடமாக எதிர்கொள்ள முடியும். கட்சியில் இரட்டைத் தலைமை என்றால் மீண்டும் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு கடும் சிரமம் இருக்கும் என்று கருதுகிறார் எடப்பாடி.

அதனால் கட்சியில் ஒற்றைத் தலைமையாக தன்னை முன்னிறுத்தும் வியூகங்கள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் உதவி கேட்டிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுக்கும் இந்த புராஜெட்க்காக சுமார் 500 பேர் ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள், அதற்காக எடப்பாடியிடம் ரூ.150 கோடி பில் கொடுத்தாராம். பிகேவின் சம்பளம் மட்டுமே 40 கோடியாம்! 

"மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ரபி பெர்னார்ட்" 

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு போதிய உறுப்பினர்கள் இருந்தாலும், திமுகவின் ஆள் தூக்கும் வேலையால், கூடிய விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்பதால்  எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தீவிரமாக முயல்கிறார். அப்போதும் தானே மீண்டும் முதல்வராக வேண்டும் அதுமட்டுமல்ல இப்போது இருக்கும் துணை முதல்வர் பதவியை கொடுக்கக்கூடாது என்பதிலும், ஒற்றைத்தலைமை தாம் தான் இருக்கவேண்டும். அதற்கான வியூகம் வகுப்பதற்கான ஏற்பாடுதான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்தித்தாராம்.

இந்த சந்திப்புக்கு அதிமுக முன்னாள் ராஜ்யசபா எம்பியான வில்லியம் ரபி பெர்னார்ட்  ஏற்பாடு செய்திருக்கிறார். ரபி பெர்னார்ட் முதல்வரின் சொந்த ஊர் மட்டுமல்ல, மீடியா உலகிலும், அரசியல் உலகிலும் உள்ள தன்னுடைய அனுபவத்தை , எடப்பாடிக்காக திரைமறைவில் பயன்படுத்தி வருகிறார். அவரது யோசனையில் தான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்தித்தாராம். 

"பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் பிகே"

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிஜேபியின்  பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு தேர்தல் ஆலோசனைக்கு கொடுத்தது.  அடுத்து, 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரை ப்ரமோட் செய்து. நிதீஷ் குமாரை  ஆட்சி அமைக்கவைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஜெயித்தார் ஆனால் இதற்க்கு நான்கு வருடத்திற்கு முன்பே போட்டு கொடுத்த பிளானை பக்காவாக இம்ப்லீமென்ட் செய்து வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக, மேற்குவங்காளத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜிக்காக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்துள்ளாராம்.

சபரீசனும் பிகேவும் தோஸ்த்!

ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் இன்டலிஜெண்ட், எலக்ஷனுக்காக பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பவர் தான் இந்த பிரஷாந்த் கிஷோர், இவர் ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார். அதேபோல, ஓஎம்ஜி நிறுவனமும் இவருடையது தான், இதில் கொடுமை என்னன்னா? பிரஷாந்த் கிஷோரும் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பயங்கர தோஸ்த்தாம், "had your breakfast? had your lunch? என  தினமும் போனில் கேட்கும் அளவிற்கு தோஸ்த்தாம்,  ஓஎம்ஜி என்கிற நிறுவனம்தான் திமுகவுக்கு பிரசார, விளம்பர வியூகங்களை வகுத்து கொடுக்கிறது. இவரை வைத்து தேர்தல் பிளான் போடுவதா? இவரோடு நாம் டீல் வைத்து கொண்டால் என்னவாகும்?  

கடந்த 2017ஆம் ஆண்டு, பிரசாந்த் கிஷோருடன்  சந்திப்பு நடத்தினாராம் ஸ்டாலின்,  திமுகவின் மூத்த அமைச்சர்கள் பிரசாந்த்க்கு தமிழக நிலவரம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று தலைமைக்கு தெரிவிக்க, அந்த திட்டத்தை திமுக அப்படியே கைவிட்டு விட்டது. ஆனாலும், சபரீசன், பிரசாந்த் உடன் செம நெருக்கமாம். இப்படி இருக்கையில் எப்படி அவரோடு நாம் தேர்தல் ஐடியா கேட்பது என முட்டுக்கட்டைப் போடுகிறதாம் ஓபிஎஸ் டீம்.