மதுரையில் உறவினர்கள் இருவருக்கிடையில் நடக்கும் பழிபழிக்கு பழிவாங்கும் சம்பவத்தில் இதுவரைக்கும் சுமார்20 பேர் பலியாகி இருக்கிறார்கள். இன்னும் அவர்களின் ரத்த வெறி அடங்கவில்லை.என்று தான் ரத்த வெறி அடங்குமோ என்கிற அச்சத்தில் மதுரை மக்கள் பதட்டத்தோடு இருக்கிறார்கள். இன்று அதிகாலை நடத்த பெட்ரோல் குண்டு வீச்சு அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

விகே. குருசாமி தற்போது ஒரு கொலை வழக்கில் சிறையில் இருக்கிறார். இவரது உறவினர் ஒருவர் சாவுக்கு பரோலில் வந்ததால் எப்படியாவது விகே. குருசாமியை போட்டுதள்ள வேண்டும் என்று எதிர் தரப்பினர் திட்டம் போட்டு இன்று அதிகாலை பெட்ரோல் பாம் வீசியிருக்கிறார்கள். அங்குள்ள கார் பைக் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டது அந்த கும்பல்.
இந்த சம்பவம் முழுவதும் சிசிடி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.சில வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் குருசாமி பரோலில் வந்தவுடன் மீண்டும் கொலை வெறி தாக்குதல் நடந்தேறியிருக்கிறது. இதனால் மதுரை கீரைத்துரை பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கீரைத்துரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாண்டி குருசாமி ஆகிய இருவரும் உறவினர்கள் தான். அவர்களுக்குள் தொழில் அரசியல் என பல்வேறு போட்டிகளால் இந்த பகுதிக்கு யார் டான் என்கிற போட்டி நிலவ ஆரம்பித்தது. அப்படியே படிப்படியாக கொலை சம்பவங்கள் வரைக்கும் போய் அது பழிக்கு பழியாக மாறியிருக்கிறது. இதற்கு முடிவு இல்லாமல் இருப்பது தான் வேதனையான ஒன்று.

.மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி. அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டி. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.இருவருமே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருத்தரிவான் பகுதியைச் சேர்ந்தவர்கள். உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இரு தரப்பினரும் பத்தாண்டுகளுக்கும் மேலாக மோதி வருகின்றனர். 

இதில் மதுரை மற்றும் கமுதி பகுதிகளில் நடந்த பழிக்குப்பழி மோதல்களில் இருதரப்பையும் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இதில் கடந்த 2016 ஆகஸ்ட்டில் வி.கே.குருசாமியின் மருமகன் முத்துராமலிங்கம் என்ற காட்டுவாசி மதுரை வளையங்குளம் அருகே பேருந்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் வி.கே.குருசாமியின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடத்தினர். இதில் காவல் ஆய்வாளரை தாக்க முயன்றபோது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கும்பல் தப்பிச்சென்றது. இதையடுத்து காட்டுவாசி கொலைக்கு பழிக்குப் பழியாக ராஜபாண்டியின் மகன் முனியசாமி என்ற தொப்புளியை 2017 ஜூன் மாதம் வி.கே.குருசாமி தரப்பு கடத்திச் சென்றது.இதுதொடர்பாக  ராஜபாண்டியின் மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வரிடம் நேரடியாக புகார் அளித்தனர்.

 இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் முனியசாமி என்ற தொப்புளியை வி.கே.குருசாமி தரப்பினர் கடத்திச்சென்று எரித்துக்கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் விகே.குருசாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.இதற்கு பழி தீர்ப்பதற்காக கடந்த 18-ஆம் தேதி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த வி.கே.குருசாமியின் ஆதரவாளர் மணிகண்டனை(28) ராஜபாண்டி தரப்பினர் தலையை துண்டித்துக் கொலை செய்தனர். இதில் மணிகண்டனின் தந்தை மூர்த்தி மற்றும் அவரது சித்தப்பா இருவரும் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாண்டி தரப்பினரால் கொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் வி.கே.குருசாமியை மதுரையில் இருக்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.  இதையேற்று அவரும் தற்போது வெளியூரில் இருந்து வருகிறார்.இந்நிலையில் வி.கே.குருசாமியை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டிய ராஜபாண்டி தரப்பினர் மதுரை சிக்கந்தர் சாவடியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் சென்று அவர்களை பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட  மோதலில் மந்திரி என்ற முத்துஇருளாண்டி, சகுணி கார்த்திக்  இருவரும் துப்பாக்கிட்டி சூட்டில் உயிரிழந்தார்கள்.