தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அங்கு பணி புரிந்த நிரந்தர தொழிலராளர்களுக்கு மாற்று வேலை தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் 99 நாட்கள் பொது மக்கள் நடத்திவந்த அமைதிப் போராட்டம் நூறாவது நாளில் வன்முறையாக வெடித்தது.

இன்று நடந்த போராட்டத்தில் அப்பாவிப் பொது மக்கள் 13 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானர்கள். இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிபிசிஐடி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனவும்  மாசு காட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் சிதம்பரபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை அவரது இல்லத்தில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் இன்று சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆலையைச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்ற அரசின் கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், . ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை எஙனறுஙம தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். தூத்துக்குடிக்கு நிறையத் திட்டங்கள் வரவுள்ளதால், அதில், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்..