Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை இயக்க அனுமதி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..!

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை 4ம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை  இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க உள்ளது. 

Permission to operate 17 workshops in Chennai...edappadi palanisamy
Author
Chennai, First Published May 24, 2020, 11:45 AM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை 4ம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை  இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க உள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்;- சென்னை கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை, இயக்க அனுமதிக்க வேண்டும், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கை அடிப்படையில், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள்( நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள்) 25.5.2020 முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்கக்கூடாது.

Permission to operate 17 workshops in Chennai...edappadi palanisamy

நிபந்தனைகள்;-

* தினமும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேன்னர் மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

* பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

* சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

* தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

* தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

* சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* இது தவிர, பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios