periyar would have beaten the bat until he was awarded
பெரியார் இருந்திருந்தால் பா.வளர்மதிக்கு விருது கொடுத்த வரை தடியால் அடித்திருப்பார் என திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான விருதுகள் யார் யாருக்கென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இதில் பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளை நேற்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசா, பெரியார் ஜாதியை ஒழிக்க நினைத்தார் எனவும் ஜாதி கடவுளின் அடிப்படையில் வருவதாக கூறியதால் தான் பெரியார் கடவுளை வெறுத்தார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அப்படிப்பட்ட பெரியார் விருதை, ஜெயலலிதாவிற்காக தீச்சட்டி எடுத்த பா.வளர்மதிக்கு கொடுக்கின்றனர். பெரியார் இருந்திருந்தால் வளர்மதிக்கு விருது கொடுத்தவரை தடியால் அடித்திருப்பார் என விமர்சித்தார்.
