பெரியாரின் சொந்த பேரன் பாஜகவில் இணைந்ததால் அதிமுக- திமுக கட்சிகள் அதிர்ச்சியாகி கிடக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பச்சையப்பா தெருவில் வசித்து வருபவர் சதீஷ் கிருஷ்ணா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கொள்ளு பாட்டியும், பெரியாரின் அம்மாவும் சகோதரிகள் என்று அவர் கூறினார். என்னுடைய தாய் ஈரோட்டில் பிறந்தவர் என்றும், தந்தை முத்துகிருஷ்ணன் திருவாரூர் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் எனவும் சதிஷ் கிருஷ்ணா கூறினார்.

எனது பெற்றோர்  ரைஸ் மில் நடத்தி வந்ததாக கூறிய அவர், நான் சிறுவனாக இருக்கும் போது, தந்தை பெரியார் தங்கள் வீட்டிற்கு வந்திருந்தாகவும் குறிப்பிட்டார். 2018ல் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்ததாகவும், தற்போது பாஜகவின் கொள்கை பிடித்துள்ளதால்,  தற்போது இந்த கட்சியில் இணைந்ததாகவும், பெரியாரின் பேரன் சதீஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.