Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி... கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு.

மொத்தம் 27 ஆயிரத்து மூன்று பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நடைபெற்றுவரும் நிலையில், எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவிப்புச் செய்துள்ளார். 

Peoples MNM Party stand alone in local elections ... Kamal Haasan Action Announcement.
Author
Chennai, First Published Sep 16, 2021, 11:46 AM IST

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்துப் போட்டியிட அறிவிப்பு செய்துள்ளது, அதேபோல தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தனித்து போட்டி என அறிவித்துள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி என அறிவிப்பு செய்துள்ளது. 

தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர்,  மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுகமாக தேர்தலும் நடத்தப்படுகிறது.

மொத்தம் 27 ஆயிரத்து மூன்று பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நடைபெற்றுவரும் நிலையில், எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவிப்புச் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடும் என்றும் 9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios