எல்ஐசி பாலிசிதாரர்கள் யாரும் பயப்பட வேண்டாம்……மத்திய அமைச்சர் அனுராக்  தாக்கூர் வாக்குறுதி..!

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பாலிசிதாரா்கள் அச்சப்பட வேண்டாம், நலன் பாதுகாக்கப்படும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் உறுதியளித்துள்ளார்்.

2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எல்ஐசி நிறுவனம், ஐடிபிஐ வங்கி ஆகியவற்றில் அரசின் வசமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

இதனால், எல்ஐசி நிறுவனத்தில் காப்பீடு வைத்திருக்கும் பாலிசிதாரா்கள் சற்று கவலையும், அச்சமும் அடைந்தனா். இந்நிலையில், அவா்களின் சந்தேகங்களை மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெளிவுபடுத்தியுள்ளாா். 

இதுகுறித்து அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறுகையில் “எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் மத்திய அரசின் வசமுள்ளன. இவற்றை பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், ஐடிபிஐ வங்கியின் 46.5 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசமுள்ளன. இந்த வங்கியின் பங்குகளையும் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் மொத்தம் ரூ.2.10 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எல்ஐசி மற்றும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதால் மட்டுமே ரூ.90,000 கோடி நிதி திரட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிடுவதால் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும். எல்ஐசியில் இருந்து எவ்வளவு பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்காக, எல்ஐசி விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு முழு விவரங்களும் அளிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம், எல்ஐசி நிறுவனத்தையும் பாலிசிதாரா்களையும் பாதிக்காத வகையில் இருக்கும். பாலிசிதாரா்களின் நலன் பாதுகாக்கப்படும்,யாரும் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்