People who voted against the bus tariff hike
கோவையில் பேருந்து நிலையத்தில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் வாக்களித்து வருகின்றன. சேகரிக்கப்பட் வாக்குகள் அனைத்தும், முதலமைச்சருக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். செங்கம் அருகே உள்ள அன்வராபாத்பேட்டை மெயின்ரோட்டில் மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூரில், அரசு சிக்கண்ணா கலை கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள்
திருப்பூர் பேருந்து நிலையம் முன் திரண்டனர். அப்போது அவர்கள் பேருந்து கட்டண உயர்வுக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இதேபோல், தஞ்சை, நாகை, திருவள்ளூர் மாவட்டம் போன்னேரி பேருந்து நிலையம், கோவை உள்ளிட்ட இடங்களில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. சென்னை, செங்குன்றத்தில், இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், கோயம்பத்தூரில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். பொதுமக்கள் அளித்த வாக்குகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
