Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் அரசின் முடிவுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி.

அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

People should give full cooperation to the governments decision in the Ganesha Chaturthi issue: Tamil Nadu Government Action.
Author
Chennai, First Published Aug 20, 2020, 11:50 AM IST

பொது மக்களின் நலன் கருதி, விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், அரசு தடை செய்துள்ள நிலையில், பொது மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

People should give full cooperation to the governments decision in the Ganesha Chaturthi issue: Tamil Nadu Government Action. 

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

People should give full cooperation to the governments decision in the Ganesha Chaturthi issue: Tamil Nadu Government Action.

இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios