people protest in madurai condemns bus fare hike

பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு பேருந்துகளில் 100% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு அறிவித்து 20ம் தேதி காலை முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. மக்கள் மீது அக்கறையற்ற அரசின் செயல், மக்களுக்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.

எது எப்படியோ.. ஆனால், சுமை என்னவோ மக்கள் மீதுதான் திணிக்கப்பட்டது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.