சென்னை வறண்டது குறித்து நான் கூறியது எனது கருத்தல்ல. மக்களின் கருத்தே.. மக்கள் கூறியதையே நானும் பதிவிட்டேன் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் 6வது பெரிய நகரமாக சென்னை விளங்குகிறது. ஆனால் தண்ணீர் தட்டுப்பாட்டில் முதல் நகரமாக திகழும் வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதேநகரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு, கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? பதில்: மோசமான அரசின் செயல்பாடு, ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு துணிவற்ற மக்கள். அவர்களின் கோழைத்தனமும் சுயநலமும் தான் காரணம் ’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பலரும் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அது தனது கருத்து அல்ல. மக்களின் கருத்தே. அதைத்தான் நான் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தேன்’’ எனக் கூறி உள்ளார்.