Asianet News TamilAsianet News Tamil

Chennai Rain Live Updates: தமிழக மக்களே உஷார். அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் அடிச்சு ஊற்றப்போகுதாம்.

20.11.2021: நீலகிரி நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி சேலம் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

People of Tamil Nadu be alert .. for the next 4 days heavy rain in these districts ..
Author
Chennai, First Published Nov 19, 2021, 2:40 PM IST

வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 19.11.2021 கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஈரோடு சேலம் தர்மபுரி வேலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் வடமாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

People of Tamil Nadu be alert .. for the next 4 days heavy rain in these districts ..

20.11.2021: நீலகிரி நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி சேலம் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.11.2021:. அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி கடலூர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22, 23.11.2021:. தென் மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

People of Tamil Nadu be alert .. for the next 4 days heavy rain in these districts ..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  மீனவர்கள் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வட தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று விசா வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று மாலை நான்கு மணி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios